YouTube

Wikipedia

Search results

Recent

Categories

Ad Banner

Blogroll

About

Search This Blog

JavaScript Free Code
HTML Free Code
JavaScript Free Code
JavaScript Free Code
JavaScript Free Code

Recent Comments

Recent Post

BTemplates.com

About

Text Widget



Labels

About

Type your text here JavaScript Free Code

Blogroll

Pages - Menu

Weekly post

Cricket live score

Thursday, 20 January 2022

மிருதுலாவும் நானும் !!! பவியும் நானும் !!!

                                     Sri... page

மிருதுலாவும் நானும் !!!

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே

  பவித்ரா மிருதுலாஸ்ரீ மாறிய கதை !!!!


உன்னைப் போலொரு பெண்பிள்ளை வேண்டுமடி பேரழகி; அதற்காகவேணும் என்னை நீ காதலி!

என்னை மட்டுமே காதலிக்க வேண்டுமென நீ இட்டகட்டளையை ஏற்க இயலவில்லை! ஏனோ, உன்னை போலவே ராட்சச்சியாய் உன் மகள்!



அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன்
உன் பிறப்பால் !!

பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!!

நீ பிறந்த நாள் முதல் நீ என் மகள் என்று உரைக்க பொறாமையும் வளர்கிறது என்னுள்ளே!!

சப்தம் இன்றி மாற்றம் ஏதும் இன்றி மாறினேன் தாயாய் உன்னை பார்கையில்!!!!

தந்தையின் போராட்டங்கள் மகளின் வாழ்க்கையை வண்ணமாக்குகிறது!

தான் பெற்ற மகளை மட்டுமல்ல,
மகளின் பெயரையும் சேர்த்து பாதுகாக்க!!
தங்களின் பெயரை பின்னால் துணை
அனுப்புகிறார்,தந்தை!



சிறந்த தகப்பன் என்பவன் தன் வாழ்க்கையில் சந்தித்த தடுமாற்றங்களையும், அனுபவங்களையும் தன் பிள்ளை சந்திக்க கூடாது என்று நினைப்பவன்.

--

உன் வயது தான் வளர அதனுடன் சேர்ந்து குறையதுடிக்கிறது என் வயது !!!
---
நீ தூங்கும் தலையணையாய் என் மார்பு மட்டுமே இருக்க துடிக்கிறேன் !!!
---
வருந்தினேன் மகளே உன்னை என் வயிற்றில் சுமக்காமல் ஒரு ஆணாய் பிறந்ததை எண்ணி

அவ்வலியை போக்கி தாய் ஸ்தானம் அடைந்தேன் அப்பா என்றழைத்து என் மார்பில் நீ துங்கும் தருணம்!!!!!
---
என் மகள் நீ என்று சொல்லாமல் உன் தந்தை நான் என்று சொல்ல கர்வம் கொள்கிறேன்!!!
---
இல்லை என்னும் சொல்லை நீ அறியாமல் வழிநடத்த விரும்பினேன் மகளே , உன் வாழ்கையை

ஒரு நல்ல தகப்பனாய்!!!
---








எல்லோருக்குமே நான் எப்போதும்
இன்னொருத்தியாகவே தெரிகிறேன்
அவருக்கு மட்டும்தான்
 நான்
அவராக தெரிகிறேன்..







என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://photos.app.goo.gl/3kS8HQGwicnqwdby5

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

Wednesday, 11 December 2019

என்னைப்பற்றி

                                      Sri...

என்னைப்பற்றி

பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்துள்ள எங்களின் முதல் முயற்சியான தமிழ் வழியில் இணையதளத்தை மேம்படுத்துதல்.

படிப்பதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் புரியும் வகையில் விளக்கவும் முயற்ச்சிக்கிறேன்….அந்த முயற்சியில் உருவானது தான் இந்த இணையதலம் www.goldenvimal.ml

என்னைப் பற்றி,,


தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல் என்னும் மாநகரில் வாழும் ஒரு இளைஞன். நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று யாராவது  கேட்டால், வார்த்தைகளை கோர்த்து சரியாக அதை விளக்கிட எனக்கே சற்று கடினமாக இருக்கும்.

சரியாக சொல்லப்போனால்,
நான் ஒரு தங்கநகை வடிவமைப்பாளன்,
(Gold jewelry designer),
தேடு பொறி பயிற்சியாளன்” (Search Practitioner),

இணையம் பெரிய கடல். அறிந்துக்கொள்ள அளவா இருக்கிறது?

நான் இந்தியாவின் பலகோடி இளைஞர்களில்  நானும் ஒருவன், முன்னேறும் முனைப்புடயவன்.

கற்றோர்களிடம் இருக்கும் "களை"களை களைய விழைபவன்.

கல்லாதோரின் எண்ணிக்கையை குறைக்க விரும்புபவன்.

 தமிழின் நேர்த்தி குறைவு, பரவலாகத் தெரியலாம். மெனக்கெடாமல் கற்றுக் கொண்ட மொழியாதலால் நேர்த்தி பழகப் பழக வந்துவிடும் என்றேண்ணுகிறேன்.
  தவறிருக்கும் நிச்சயம், மன்னிக்கவும்.

என்  பள்ளி  பருவ எழுத்துக்கள் பல கால ஓட்டத்தில் காணாமல் போனது. இருப்பினும் ஒரு சிறு முயற்ச்சி, நினைவில் நின்ற சில எழுத்துகளையும் என்னுள் தொடரும் சில வரிகளையும் இந்த வலைத்தளத்தில் பதிவிட்டு மகிழ விழைகிறேன்,

இணையத்தின் பின்னாடி நான்:
நான்  2014ஆம் வருடம் இருந்தே எனக்கு இணையத்தின் மீது ஒரு தீராத காதல்… போதுமான அளவு கையில் பணம் கிடைக்கும் போதெல்லாம் என் கால்கள் ஏதேனும் ஒரு இணையமையத்தை நோக்கியே செல்லும்.  என்னுடைய கைப்பணம் எல்லாமே இணையத்தை வலம்வருவதற்கே செலவு செய்து கொண்டு இருந்தேன்,

உங்கள் விமர்சனமும், ஊக்கமும் என்னை உற்சாகபடுத்தும்.

எதாவது தமிழுக்கு நம்மால் முடிந்த சேவையைச் செய்யவேண்டும் என்று எண்ணம் உதித்தபோது உருவாக்கப்பட்டதே இந்த goldenvimal23blog.blogspot.com என்ற வலைத்தளம். இதில் முழுக்க முழுக்க
எனக்கு தெரிந்த தகவல்ளை உங்களுடன் பகிரவே இந்த முயற்சி,

இந்தத் தளத்தில் மற்றத் தளங்களைப் போல் சினிமா செய்திகளோ, நடிகர், நடிகை பற்றிய செய்திகளோ, அரைகுறை படங்களோ போட்டு பார்வையாளர்களின் எண்ணிகையை அதிகபடுத்திக் காண்பிக்கவேண்டும் என்ற தேவையில்லை.
அதற்கு நிறையத் தளங்கள் உண்டு. தகவல்களுக்கு என இதுபோன்ற தளங்கள் மிகவும் குறைவு.
நானும் மெத்தபடித்த மேதாவி இல்லை. ஆனால் தேவையான அளவு படித்த ஒரு சராசரி மனிதன்,

எனது அன்றாடம் அலுவல்களுக்கு இடையே செய்து வரும் இந்தப் பணிக்கு எதையும் நான் எதிர்பார்க்கவில்லை,

உங்கள் அன்பினும் மேலான கருத்துகளை மட்டும் தான்.,,

என் விருப்பப்படி.. 
    நீங்கள் விரும்பும்படி..

நான் கவிஞனில்லை, 
அறிஞனில்லை, 
சாதனையாளனில்லை, 
ஆனால் ஒரு சராசரி மனிதனுமில்லை..

என்னை பற்றி சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் இல்லை. சராசரி வாழ்க்கை வாழும் ஆயிரக்கணக்கான ஆண்களில் நானும் ஒருவன்.

பெரிய அளவில் லட்சியங்களோ, எதிர்ப்பார்ப்புகளோ இல்லை என்றாலும் எடுத்துக்கொண்ட வேலை எதுவானாலும் அதை திறம்பட செய்து முடிக்க வேண்டும் என நினைப்பவன்,
என் நகைத் தாெழில் வேலைகளிலும் அதை கடைபிடித்தும் வருகிறேன்.

எனக்கு கவிதைகள் பிடிக்கும்.
– மற்றவர்களின் கவிதைகளை படிக்க அதிகம் பிடிக்கும்,
– கொஞ்சம் கொஞ்சம் எழுதுவதற்கும் பிடிக்கும்..

படித்து பார்த்து நான் மேலும் தொடர தகுதி உடையவனா எனக் நீங்கள்தான் கூறவேண்டும்.

எனக்கு புத்தகங்கள் மிகவும் பிடிக்கும். என் உலகமே புத்தகங்களை சுற்றிதான்.
– தலைவர்களின் சுயசரிதம், வரலாற்று புதினங்கள், சமூக நாவல்கள், தமிழ் இலக்கியங்கள் என்று எதுவாக இருந்தாலும் அதை படித்து முடிக்காமல் எனக்கு தூக்கம் வராது.
கம்பன், கல்கி, சாண்டில்யன், ரமணிசந்திரன், , பாரதியார், பட்டுக்கோட்டை, வைரமுத்து இப்படி பிடித்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இசையில் மிகவும் விருப்பம் உண்டு. அதுவும் பழைய பாடல்கள் என்றால் சொல்லவே வேண்டாம். யாருக்கு தான் பிடிக்காமல் போகும். எம்.எஸ்.வி,
இளையராஜா, ரகுமான்  இசை மிகவும் பிடித்தமானது. நெடுந்தூர இரயில்,பேருந்து பயணங்களில் இவர்களின் இசையை கேட்பதில் கிடைக்கும் சுகமே தனிதான்.

   ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
       ஸ்ரீ

        எனக்கு
     தெரிந்த தகவல்களை
          உங்களிடம் பகிரவே
                 இந்த முயற்சி
   ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

 பெயர் : நா.சா.விமல்
பிறந்தது : திண்டுக்கல்
 படித்தது : (எஸ்.எஸ்.எல்.சி)
வேலை : நகைத் தாெழில்
மொபைல்:   +91 9865138410
  ஈ.மெயில்:  goldenvimal23@gmail.com
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
          ஆர்வம்:
        தன்னம்பிக்கை கொடுத்து
         மனிதத்  திறமைகளை   
         வெளிக்கொண்டுவந்து
        அவர்கள்   வாழ்கையில்     
       வெற்றி பெறச்  செய்வதோடு
                    மகிழ்ச்சிக்கு
                  வழிவகுப்பது,
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

  ♥♥  என்றென்றும்  ♥
              அன்புடன்
  ♥   இவன் விமல்,,,  ♥

     சிறந்த   முறையில்
          தங்க நகைகள்
      செய்து தரப்படும்,
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
    you con win
          I  help you
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
பிறரிடம்  எதுவும்  கேட்காதவன் 
                     பெரும் பணக்காரன்,
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
      உன்னால் வெல்ல முடியும்
            நான்  இருக்கிறேன்
                    உதவிக்கு,
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


                 www.goldenvimal.ml

என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. 

மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

Saturday, 7 December 2019

கணவன் மனைவி ( வெட்கத்தில் வண்ணத்து பூச்சி...)

                                      Sri...


மனைவி: என்னங்க, எனக்கு ஒரு சந்தேகம்!!!

கணவன்: என்ன?

மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???

கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!!

மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….

கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்..

(மறுநாள் இரவு)
கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண?

மனைவி: அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன், பூக்களை ரசித்தேன், கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன், நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன், நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன், கவிதைகள் படித்தேன், கார்ட்டூன் நெட்வொர்க் பாத்தேன், மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த, மழையிலும் நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால் மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவின் அழகையும் ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல…. இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிட்டுவிட்டேன்… எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த மாதிரி இருக்கு… இப்ப சொல்லு யார் அதிக மகிழ்சியா இருக்காங்கனு???

கணவன்: இப்பவும் சொல்றேன், எனக்கு தான் அதிக மகிழ்ச்சி…

மனைவி: ம்ம்… எப்படி மாமா!!!

கணவன்: அட முட்டாள், உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள அணைத்து அழகான பூக்களில் இருந்தும் தேனை சேகரித்து, என் இதழ்களில் வந்து சிந்திவிட வண்ணத்து பூச்சி போல, என் தோள்களில்
 சாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில் அடைந்துவிட்டேன் உன்னைவிட நூறு மடங்கு மகிழ்ச்சியை…

நல்ல வேளை, ஒருவன் வாழ்வில் இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க வேண்டும் என்று வரைமுறையை கடவுள் விதிக்கவில்லை, இல்லையெனில் நீ முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன் நரகத்திற்கு…

மனைவி: நரகமா???

கணவன்: (நீ இல்லாத சொர்கமும், நரகம் தானடி எனக்கு…), உனக்கு இந்த உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய்,
எனக்கு என் உலகமே
 என்னை சுற்றி வந்து முத்தமிட்ட மாதிரி இருந்தது…. 
இப்பொழுது சொல் யாருக்கு அதிக மகிழ்ச்சி?????

(வெட்கத்தில் இன்னும்சில தேன்துளிகளை சிந்தியது, வண்ணத்து பூச்சி...)

என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

Wednesday, 4 December 2019

பெண்களுக்கு குட் டச் (Good Touch), பேட் டச் (Bad Touch) என்றால் என்ன?

                                      Sri...


#வருத்தங்களுடன்
#ஒரு_விழிப்புணர்வு..😢

▪️டாக்டர் பிரியங்கா ஹைதராபாத்தில் மிருகங்களால் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டு விட்டார்.


▪️பெண்களுக்கு குட் டச் (Good Touch),
பேட் டச் (Bad Touch) என்றால் என்ன?
▪️ஆபத்தென்றால் எப்படி ஓடுவது?
▪️காவலன் ஆப் எப்படி பயன்படுத்துவது? என்று கற்றுக்கொடுக்கிறது..
▪️காவலன் ஆப்
  Download link  :-  https://play.google.com/store/apps/details?id=com.amtexsystems.kavalansos



◾அதே நேரத்தில் இதே சமுதாயம்
ஆண்களுக்கு "டோன்ட் டச்" ( Don't Touch) என்று கற்றுக்கொடுக்கிறதா?
என்றால் பதிலில்லை.

◾குழந்தைகளுக்கு ட்ராஃபிக் ரூல்ஸை (Traffic Rules) முறையாக கற்றுக் கொடுக்காத இதே சமுதாயம் தான்,
குழந்தை கடத்தல் (Child trafficking) இல்
உலகின் முன்னோடியாக இருக்கிறது.

▪️வன்புணர்வு செய்து கொல்லப்படும் மாதர் இருக்கும் இதே சமுதாயத்தில்தான் விலை கொடுத்து புணரும் மாதரும் வாழ்கின்றனர்.


◾ஒரு இரவுக்கு
தங்கள் உடலை
இரவலாகத் தருபவர்கள்
விலைமாதர்கள்

◾உடல்பசியென்று
வருபவர்களுக்கு
தினமும் தங்கள்
உடலை தானம் செய்பவர்கள்
விலைமாதர்கள்

◾உணவுப்பசியென்று
திரிபவனை திருடாமல்
'அன்னதானம்' காக்கிறதென்றால்..?

◾உடல்பசி கொண்டு
திரிபவர்களை பிற மாதர் உடலை
திருடாமல் காப்பது இவர்கள் செய்யும் '
'உடல்தானம்' தானோ..?

◾ஒரு விலைமாதர்
ஏன் உருவாகிறாள்?

▪️கைவிட்ட  கணவன்,
▪️கைவிட்ட பெற்றோர்,
▪️கைவிட்ட தனையன்,
▪️கடைசியில் கைவிட்ட மொத்த சமூகம்.

▪️விற்க காணியில்லை,
▪️கழுத்தில் தொங்கும் தாலியில்லை,
▪️கையில் ஒரு குழந்தை,
▪️இடுப்பில் ஒரு குழந்தை.

◾வேலாவேலைக்கு
சரியாக வரும் வயிற்றுப்பசி.
ஒரு தாய் தனக்கு பசியென்றால் தாங்குவாள். அதேநேரம் தன் பிள்ளை பசியோடு உறங்குவதை எப்படி தாங்குவாள்..?

◾யாரும் வேண்டி விரும்பி
சேற்றில் புரள்வதில்லை..

◾யாரும் வேண்டி விரும்பி
இத்தொழிலுக்கு வருவதில்லை..

◾யாரும் வேண்டி விரும்பி
பேரரறியா ஆடவன் தன்னைப்
புணர அழைப்பதில்லை..

▪️வீட்டு வேலை செய்து பிழைக்கலாம்ல?
▪️பண்ட பாத்தரமாவது தேய்க்கலாம்ல?
▪️உடம்ப வித்து பொழைக்குறது ஒரு பொழப்பா..?

◾என்று கேட்கும் அதே சமுதாயம் தான்..

◾கஞ்சி காய்ச்ச வழியில்லாமல் தானே
சோனாகாச்சிக்கு வருகின்றனர்.

◾கஸ்டமர்கள் இருப்பதால் தானே
பிஞ்சுக்குழந்தையையும் பிடித்துப்போய்
பாலுங்கிணற்றில் தள்ளுகிறார்கள்.



🔳எப்போதும் ஒரு தொழில் ஏன் நடக்கிறது என்பதை அதன் டிமாண்ட்  மூலம் மட்டுமே அளவீடு செய்ய முடியும்.

🔳செக்ஸ் என்றால் கெட்ட வார்த்தை
என்று பேசக்கூட அச்சப்படும்
பெற்றோருக்குத்தான் 'தஷ்வந்த்'
போன்றோர் பிறக்கின்றனர்.

🔳இன்னும் எத்தனை நாள் தான்
நாம் செக்ஸ் பற்றி குறைவாக பேசி
அதை ஒரு மாயபிம்பமாக உருவாக்கி வைக்கப்போகிறோம்?

#நாம்_தான்_யோசிக்க_வேண்டும். ⁉️

திருமணத்திற்கு மட்டும்...
▪️மதம்
▪️சாதி
▪️ஸ்டேட்டஸ்
அனைத்தும் பார்க்கப்படும்
நம் சமுதாயத்தில்
அவள் அனுமதியின்றி
அவளைப்புணர மேலே சொன்ன
எதுவும் பார்க்கப்படுவதில்லை...

◾மதுபோதையில் ரேப்
நடந்துவிட்டது.
◾மதுபோதையில் ஆக்சிடெண்ட்
ஆகி விட்டது.

என்று எதற்கெடுத்தாலும்
'மது' தான் முன்னே வருகிறது.

◾காணுமிடமெங்கும்
"மது ஆறாக ஓடும் சமுதாயத்தில்,"
'மாது' மட்டும் எப்படி
பாதுகாப்பாக வாழ முடியும்?

◾மரண தண்டனைகள்
ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய அல்ல.
இனி ஏற்பட இருக்கும்
இழப்புகளை தடுக்க.

🔲 மாதர் மேல் வண்புணர்வு
செய்யும் மிருகங்களை நீதிமன்ற ஆணைக்கிணங்க கல்லால் அடித்துக்கொல்லப்பட வேண்டும்.

🔲 அதை அனைத்து தொலைக்காட்சிகளும்
நேரலையாக ஒளிபரப்ப வேண்டும்.

🔲 பெண்ணை அவள் விருப்பமின்றி அவள் மனைவியாகவே இருந்தாலும் தொடுதல் கூட பிழை என்று சமுதாயம் உணர வேண்டும்.

🔲 அறிவு, ஒழுக்கம் இன்னும் மிச்ச சொச்சங்களாலும் முடியாதது,
உயிர் மீதுள்ள அச்சத்தால் முடியும்.

🔲 சாவு பயத்தைக் காட்டினால் ஒழிய இது முடியாது என்றே நினைக்கிறேன்.

#மாற்றம்_ஒன்றே_மாறாதது.

நிச்சயம் ஒரு பெண்
விலைமாதராக மாறுவதற்கும்,
கொலை செய்யப்பட்டு வீழ்வதற்கும்...

சமுதாயமாகிய நாம் மட்டுமே காரணம் என்று உளமாற பல வலிகளுடன் நம்புகிறேன்.

By,
Dr. ஃபரூக் அப்துல்லா,
பொது நல மருத்துவர்,
சிவகங்கை.

படித்தேன்!
பகிர்ந்தேன்!!

நன்றி அன்புத்தம்பி Dr.Farook Abdullah.

நம்பிக்கையுடன்,
     இவன் விமல்

மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

Sunday, 1 December 2019

விஸ்வகர்மா வரலாறு.

                                      Sri...

ஸ்ரீவிஸ்வகர்மா

ஸ்ரீசதாசிவமூர்த்தி
    
நமது குடும்பத்தில் வழிவழியாய் வந்த விலைமதிப்பற்ற ரத்தினக்கல் ஒன்று இருந்தால் அதை நாம் போற்றிப் பாதுகாத்து, மற்றவர்களுக்குக் காட்டி பெருமைப்படுவோம். இது மனிதனுக்கே உரிய இயல்பாகும். அவ்வாறே, நான் சார்ந்த மதத்தின் – இனத்தின் பெருமையை, புகழை இன்றைய இளம் சமுதாயத்தினர் அறிந்துகொள்ளும் வகையில் பழமையான நூல்களில் இருந்தும் பெரியோர் பலரின் அனுபவங்களிலிருந்தும், கலைகளை வளர்க்கும் வலைத்தளங்களில் இருந்தும் சிறிது சிறிதாய் சேமித்துத் தொகுத்துத் தந்துள்ளேன்.

          இது யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல. என்னை உயர்ந்தவன் என்று பறைசாற்றிக் கொள்ளவும் அல்ல. வரலாற்றில் கரைந்துவிட்ட சில இழைகளை அறிந்தவர்களுக்கு நினைவூட்டி, அறியாதோருக்கு எடுத்துக்காட்டவும் எடுக்கப்பட்ட ஒரு சிறு முயற்சியே.


           இதில் தவறுகள் இருந்தாலும், திருத்தங்கள் இருந்தாலும் கோலோய்ச்சிக் கூறலாம், பாராட்டுக்களையும் பணிவோடு ஏற்கிறேன்.

விஸ்வகர்மா வரலாறு...


       சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தேசத்தின் ஆணிவேராகவும், எல்லா கலைகளுக்கும் மூலவித்தாகவும், ஹிந்து மதத்தின் தலைமகனாகவும், 2300 வருடங்களுக்கு முன் படையெடுத்து வந்த அலெக்சாண்டர் முதல் தற்போது இந்தியாவிற்கு சுற்றுபயணம் வரும் வெளிநாட்டுக்காரர்கள் வரை வந்து பிரமித்து பார்க்கும் அனைத்து கலைப் பொக்கிஷங்களையும் படைத்து இந்தியாவின் அடையாளமாகவே வாழ்ந்து வந்த நம் விஸ்வகர்மா சமுதாயத்தின் இன்றைய வீழ்ச்சிக்கும், முன்னேற்றமின்மைக்கும், ஒற்றுமையின்மைக்கும் மிக முக்கிய காரணம் நம் விஸ்வகர்மா இன மக்கள் தங்கள் குலக்கடவுளான ஸ்ரீவிஸ்வகர்மாவிற்கும், ஸ்ரீகாயத்ரி தேவிக்கும் உரிய முக்கியத்துவம் தராமல் மறந்து போனது தான் என்று உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீவிஸ்வகர்மபுத்ர மகரிஷி அவர்கள் வருத்ததுடன் தெரிவித்து உள்ளார்.


   தென்னிந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் வாழும் 65சதவிகித  ஐந்தொழில் விஸ்வகர்மா இன மக்களுக்கு தங்கள் கடவுள்
ஸ்ரீவிஸ்வகர்மா மற்றும் ஸ்ரீகாயத்ரி தேவி என்பதே தெரியாமல் வாழ்கிறார்கள்.
இதில் மீதி 30 சதவிகித பேர் கூட ஸ்ரீசதாசிவமூர்த்தியை தான் ஸ்ரீவிஸ்வகர்மா என்று வணங்குகிறார்கள்.
ஸ்ரீவிஸ்வகர்மா
ஸ்ரீவிஸ்வகர்மா
ஸ்ரீசதாசிவமூர்த்தி
ஸ்ரீசதாசிவமூர்த்தி


தன் ஐந்து நெற்றிகளில் திருநாமம் அணிந்தவர் தான் ஸ்ரீவிஸ்வகர்மா (படைப்புக் கடவுள்) மாறாக, விபுதி பட்டை அணிந்தவர் ஸ்ரீசதாசிவமூர்த்தி (அழிக்கும் கடவுள்). நம்மவர்கள் பெரும்பாலும் ஸ்ரீசதாசிவமூர்த்தியையே ஸ்ரீவிஸ்வகர்மா என்று நினைத்து வணங்கி வருகிறார்கள். இது இரு பெரும் கடவுள்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால் ஏற்பட்ட குழப்பம் மற்றும் இது ஏற்படுத்தப்பட்ட குழப்பம். ஸ்ரீவிஸ்வகர்மாவின் முக்கிய ஆயுதமான சுத்தியல் ஸ்ரீசதாசிவமூர்த்தியின் கரங்கள் எதிலும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் கவனிக்கத்தக்கது. ஆதியில் சிவபெருமானும் நாமத்துடன் தான் ஸ்ரீவிஸ்வகர்மாவால் படைக்கப்பட்டார் ஆனால் பிறகு வந்த காலத்தி்ல் தனது அழிக்கும் பணி சிறப்பாக நடைபெறுகிறது என்பதை உலகிற்கும் மற்றவர்களுக்கும் உணர்த்தும் பொருட்டே சிவபெருமான் தான் அழித்தப் பொருட்களின் சாம்பலை எடுத்து விபுதியாகப் புசிக் கொண்டார் என்பது வரலாறு.

    
    உலகின் முதல் வேதமான ரிக் வேதம் ஸ்ரீவிஸ்வகர்மா-வை அனைத்து கடவுள்களையும் படைத்தவர் என்றும் அவர்களுக்கு பெயரிட்டவர் என்றும் பிரபஞ்சத்தின் மூலக்கருவையே தோற்றுவித்தவர் என்றும் 10ம் அதிகாரம் முழுவதும் தெளிவாக கூறுகிறது. ரிக் வேதம் மட்டுமல்ல, யஜுர், சாம, அதர்வணம் என அனைத்து வேதங்களும் நம் கடவுள் ஸ்ரீவிஸ்வகர்மாவை துதிப்பாடுகின்றன. எந்த யாகம் நடத்தப்பட்டாலும் அதில் ஸ்ரீவிஸ்வகர்மாவிற்கு உரிய அவில்பாகம் கொடுக்கப்படுகிறது. எந்த கோயில் கும்பாபிஷேகம் நடந்தாலும் புனித நீரை நம் குலக்கடவுள் ஸ்ரீவிஸ்வகர்மாவின் பெயரை சொல்லி தான் தெளிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட உயர்ந்த கடவுளை நாம், அதாவது அவரின் குழந்தைகள் மறந்து விட்டு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம்.

நம்மை வீழ்த்த நினைத்தவர்கள் 11ம் நூற்றாண்டில் செய்து வைத்த தவறான, குழப்பமான மற்றும் நம் சமுதாயத்தையே வேரறுக்கும் அளவிற்கு நம்மையும் நம் குலக்கடவுளையும் பிரித்து வைக்கும் படியான வழிபாட்டு முறையை தான் நாம் தற்போது பின்பற்றிக் கொண்டு இருக்கிறோம். இந்த தவறான முறையால் நாம் நம் கடவுளை மறந்து விட்டோம் அல்லது இழந்து விட்டோம் அல்லது தவறாக வணங்கிக் கொண்டிருக்கிறோம். அந்த காலக்கட்டத்தில் தான் நமது ஸ்ரீவிஸ்வகர்மாவின் புகழைப்பரப்பி வந்த நமது மடங்கள் எல்லாம் வலுக்கட்டாயமாக சைவ(சிவ)மடங்களாக மாற்றப்பட்டன. அங்கு சிவபெருமானுக்கும், லிங்கத்திற்கும் தான் முக்கியத்துவம் தரப்படும் படி செய்யப்பட்டன. இதன்படி ஸ்ரீவிஸ்வகர்மாவை மறக்கடிக்க செய்து விட்டனர். நம்மையும் நம் கடவுளையும் பிரித்து வைக்கும் அந்த தவறான முறையை மாற்றி அமைத்து மீண்டும் நம் விஸ்வகர்மா இன மக்களை அதாவது ஸ்ரீவிஸ்வகர்மாவின் குழந்தைகளை மீண்டும் ஸ்ரீவிஸ்வகர்மாவின் பக்தர்களாக மாற்றுவதே எங்களின் புனிதமான லட்சியமாகும்.

    நம்மவர்கள் மற்ற கடவுள்களுக்கு தரும் முக்கியத்துவத்தை நம் குலக்கடவுள்களான ஸ்ரீவிஸ்வகர்மாவிற்கும், ஸ்ரீகாயத்ரி தேவிக்கும் அளிப்பது கிடையாது. ஸ்ரீவிஸ்வகர்மாவின் பக்தர்கள் என்றால் மற்ற கடவுள்களை வணங்கக் கூடாது என்று அர்த்தமல்ல. அப்படி சொல்வது மிகப்பெரிய காட்டுமிராண்டித்தனம். அப்படி நாங்கள் சொல்லமாட்டோம். நாங்கள் கேட்பதெல்லாம் ஆயிரம் கடவுள்களை கூட வணங்குங்கள் தவறில்லை. ஆனால் நம் குலக்கடவுள் ஸ்ரீவிஸ்வகர்மாவையும் ஸ்ரீகாயத்ரி தேவியையும் வணங்காமல் அல்லது தவறாக ஸ்ரீசதாசிவமூர்த்தியை ஸ்ரீவிஸ்வகர்மா என்று வணங்கி விட்டு ஆயிரம் கடவுள்களை வணங்கி என்ன பயன்? என்று தான் கேட்கிறோம்.

    நாம் சைவ மதமா? வைணவ மதமா? என்று நம் சமுதாயத்தைச் சேர்ந்த ஆன்மீகப் பெரியவர்களே சந்தேகத்துடன் கேட்கிறார்கள். உண்மையில் நாம் சைவ மதமும் அல்ல (அனைத்தும் ஒரு நாள் சாம்பலாகும் என்ற கொள்கை) வைணவ மதமும் அல்ல (நமக்கு விதிக்கப்பட்ட கடமையை நாம் செய்ய வேண்டும் என்ற கொள்கை). நாம் படைப்பவர்கள். நாம் தனி மதம். சிவபெருமானை வணங்கும் சைவம், விஷ்ணுவை வணங்கும் வைணவம், சக்தியை வணங்கும் சாக்கியம், விநாயகரை வணங்கும் கணபாத்தியம், சூரியபகவானை வணங்கும் சௌமாரம், முருகப்பெருமானை வணங்கும் கௌமாரம் போல விஸ்வகர்மா என்பது ஸ்ரீவிஸ்வப்பிரம்மனாகிய ஸ்ரீவிஸ்வகர்மாவையும், ஸ்ரீகாயத்ரி தேவியையும் மற்றும் ஐந்து ரிஷிகளையும் வழிபடும் தனி மதம் அதுவும் விஸ்வகர்ம மதம் என்பது ஹிந்து தர்மத்தின் முதல் மதம். இதை மறந்து விட்டு நாம் அடிப்படையிலேயே தவறு செய்கிறோம்.

    அது எந்த அளவிற்கு நம்மையும், நம் தலைமுறைகளையும் பாதிக்கிறது என்பதையும் உணராமல் வாழ்கிறோம். ஸ்ரீவிஸ்வகர்மாவையும், ஸ்ரீகாயத்ரி தேவியையும் முறையாக வணங்கி வரும் நம் ரத்த சொந்த பந்தங்களான வட இந்திய விஸ்வகர்மாக்கள் தங்கள் தொழில்கள் உள்பட அனைத்து துறைகளிலும் கொடிக்கட்டிப் பறக்கின்றனர். பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் உள்பட பலவற்றை ஆரம்பித்து வட இந்தியாவில் உள்ள மற்ற சமுதாயத்தினருக்கு உதாரணமாக திகழ்கிறார்கள். மற்ற சமுதாயத்தினருக்கு மட்டுமல்ல, நமக்கும் கூட உதாரணமாக திகழ்கிறார்கள். நாமும் நம் கடவுள்களை வணங்க ஆரம்பித்தால் வாழ்வில் என்றென்றும் சுபிட்சமும், உண்மையான நிம்மதியும், நிலையான சுபிட்சமும் பெறலாம்.

     நாம் புனிதமான விஸ்வகர்மாக்கள், மற்றவர்களைப் போல பிரம்மனால் படைக்கப்பட்டவர்கள் அல்ல. உயர்ந்த கடவுளின், அதுவும் எல்லா கடவுள்களையும் படைத்த ஸ்ரீவிஸ்வப்பிரம்மனாகிய ஸ்ரீவிஸ்வகர்மாவின் ஐந்து தலைகளில் இருந்து நேரடியாக படைக்கப்பட்டவர்கள். நமக்கு என்று தனியாக நியதிகள், முறைகள், குல மரபுகள், தனி அடையாளங்கள் உண்டு. மற்றவர்கள் போல் நாம் நடந்து கொண்டால் அதில் நமக்கு பலன்கள் கிடையாது அல்லது குறைவு. நாம் யார் என்பதை உணர்ந்தால் தான், நாம் யாருடைய ரத்தம் என்பதை உணர்ந்தால் தான், நமது குலமரபுகளை நாம் பின்பற்றினால் தான, நம்மால் அனைத்தையும் சாதிக்க முடியும். நம் முன்னோர்களைப் போல காலத்தால் அழியாத கலைப் படைப்புகளை ஏன் தனி சரித்திரத்தையே கூட படைக்க முடியும்.


வரலாறு
ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளவாறு:



தேவ சிற்பி என்று புகழப்படும் ஸ்ரீ விஸ்வகர்மாவே ஸநாதனமான ஸப்த ரிஷிகளுக்கும் முதன்மையானவர். பிரபாஸூக்கும், யோக சித்தைக்கும் மகனாய் அவதரித்தவர். யோக சித்தை மஹா பிரஹஸ்பதியின் சகோதரி. பிராஸ் அட்டம பஸூவின் எட்டாம் தலைமுறை ரிஷிகுமாரர்.

ரிக் வேதம் விஸ்வகர்மாவைப் புகழ்வதைக் கண்ணுறுங்கள்:

முழு உலகத்தையும் வடிவமைத்த தெய்வீக கைவினைஞன் விஸ்வகர்மா. (ரிக் வேதம் 10.81.03)இவரே தெய்வங்களின் வசிப்பிடங்களையும், அவர்களது வாஹனங்களையும், பறக்கும் இரதங்களையும் வடிவமைத்தவர்.நான்காவது துணை வேதமாகிய ஸ்தபத வேதத்தை வெளிப்படுத்தியவர்.அறுபத்து நான்கு ஆய கலைகளுக்குத் தலைவரானவர்.சொர்க்கம், நரகம் இவைகளோடு பதினான்கு உலகங்களையும் படைத்த ஆதி பிரம்மன்.தெய்வங்களுக்கு ஆயுதங்களையும் செய்தளித்தருளியவர். குறிப்பாக இந்திரனுக்காக ததிச்சி என்ற முனிவரின் முதுகெலும்பிலிருந்து வஜ்ராயுதத்தையும், விஷ்ணுவிற்காக சாரங்கம் என்னும் வில்லையும், சிவபெருமானுக்காக பிங்களம் என்னும் வில்லையும் படைத்தளித்தவர்.சிவ-பார்வதி திருமணத்தின் போது லங்கா பட்டிணத்தை ஸமுத்திரத்தின் மத்தியில் படைத்தவர்.இராமபிரானுக்கு உதவுவதற்காக கடலினில் ஸேதுவை கட்டும் வல்லமையுள்ள நளன் என்னும் வானரத்தைப் படைத்தவர்.ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் ஆட்சிப்பீடமான துவாரகையையும், எமபுரத்தையும் சிருஷ்டித்தவர்.

இப்படி பலப்பல அற்புத நிகழ்வுகளை வேதப்பதிவுகளிலிருந்து கூறிக்கொண்டே போகலாம்.

வசிஸ்ட புராணம் (3.6.11)ல் கூறப்பட்டுள்ளவாறு,
ஸ்ரீ விராட் விஸ்வகர்மாவானவர், தனது ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து பிரம்மாக்களை படைத்தார். பஞ்ச பிரம்மாக்கள் என்றும் பஞ்ச பிரம்ம ரிஷிகள் என்றும் அழைக்கப்பட்ட இவர்கள்:
1. சானக பிரம்ம ரிஷி,          2.ஸநாதன பிரம்ம ரிஷி,                3. அபுவநஸ பிரம்ம ரிஷி,         4. ப்ரத்னஸ பிரம்ம ரிஷி,       5. ஸூபர்ணஸ பிரம்ம ரிஷி

ரிக் வேதம் (10.81. மற்றும் 10.82) ஸ்ரீ விராட் விஸ்வகர்மாவின் சொரூபத்தை சித்தரிக்கிறது:
          உலகத்தின் முழு முதல் தோற்றுவிக்கும் சக்தியாகவும், உலகத் தந்தையாகவும் விளங்குபவர் தனது அனைத்துப் புறங்களிலும் விழிகளையும், வதனங்களையும், புஜங்களையும், பாதங்களையும் உடையவர்.
மஹாபாரதம், ஹரிவம்சம் போன்ற மஹா காவியங்கள் “கலைகளின் தேவன். ஆயிரக்கணக்கான தொழில்நுட்பங்களை விளைவிப்பவர், கடவுளர்களின் சிற்பி, மிகவும் முதல்தரமான, மேம்பட்ட, தலைமையான தொழில் நிபுணர், அணிகலன்களில் புதுமைகளைப் புகுத்துபவர், முடிவும்-அழிவும் அற்ற நிலையான இறைவன்.” என்று விராட் ரூபத்தைப் புகழ்கின்றன.



நான்கு கரங்களையுடைத்தும், மணிமுடி தரி்த்தும், மணம் நிறைந்த மலர்களைச்சூடியும், பட்டாடை உடுத்தும், நவரத்ன சிம்மாஞஸத்தில் வீற்றும், தனது நான்கு கரங்களில் புனிதநீர்க் கமண்டலமும், ஒலைச்சுவடியும், பாசக் கயிறும், அளக்கும் கருவியும் தாங்கியவராய் வேத-புராண-சாஸ்த்ரங்களிலே வர்ணிக்கப்படுகிறார்.

மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

Friday, 29 November 2019

திண்டுக்கல் தங்கம் வெள்ளித் தொழிலாளர் சங்கம் NS.VIMAL

                                      Sri...
திண்டுக்கல் தங்கம் வெள்ளித் தொழிலாளர் சங்கம்

வாழ்க நகைத்தாெழில்                                              வளர்க ஒற்றுமை      

ஸ்தாபிதம் : 1944

28, காசுக்கடை தெரு,
திண்டுக்கல்.


வணக்கம் உறவுகளே நாம் ஒன்றினைந்து ஒரு ஆபரணநகை தயாரிப்பு நிர்வாகத்தை ஏற்ப்படுத்தி நமது வியாபர திறமையையும் வெளிபடுத்தலாம் நமது தொழில் நளிவடைந்து இருப்பது இன்று பல கார்ப்ரேட் நிருவணங்கள் நமது இடத்தை அபகரித்ததுள்ளது அதற்க்கு நம்முள்ளும் ஒற்றுமை குறைவாக இருப்பதும் ஒரு காரணம் நமக்கான வணிகத்தை ஏற்ப்படுத்துவோம் இன்று  நம்மில் அரசின் நன்மைகளை பெற்று தர படித்தவர்களும் அதை சரியான வழியில் நடத்திச்செல்ல அனுபவஸ்தர்களும் உள்ளனர் நமது படித்த இளைஞர்களை 
நிர்வாகத்தை நடத்தவிட்டு நாம் தொழிலை செய்வோம் மக்களுக்கு மீண்டும் நம் தொழிலை வழங்குவோம் 
நாம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளோம் ஆனால் வளர்ச்சி இல்லை 
எல்லோரும் மாறிகொண்டுள்ளனர் நாம் மட்டும் தான் இன்னும் அப்படியே உள்ளோம் நாமும் மாற்றத்தை உருவாக்குவோம் நம்மவர்கள் இன்று நமது தொழிலை விட்டு வேறு வேலைக்குச்செல்வதை தடுப்போம் 
உலகிற்க்கு உயிர்கொடுத்த வம்ஸம் விஸ்வகர்மா நம்மால் முடியாது என்றால் யாரால் முடியும் வாருங்கள் புதிய வழியை உருவாக்குவோம்
ஒன்று கூடி விவாதிப்போம் விவேகமான முடிவு எடுப்போம்,
♥♥


தங்கம் பொன் வெள்ளி தொழிலாளர்கள் சங்க விழா


Home
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் தங்கம் பொன் வெள்ளி தொழிலாளர்கள் சங்க பவள விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
சங்க பொதுச்செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். முன்னதாக நடந்த ஊர்வலத்தை தமிழ்நாடு கைவினைஞர்கள் சங்க மாநில பேரவை பொதுச்செயலாளர் செல்வராஜ் துவக்கி வைத்தார். தங்கம் பொன் வெள்ளி

தொழிலாளர்கள் சங்க தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் நடராஜன் வரவு செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்தார்.விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க மாநில தலைவர் சண்முகநாதன் மலர் வெளியிட்டார். நகை தொழிலாளர் மத்திய சங்க மாநில தலைவர் பெருமாள், சங்க துணை தலைவர்கள் குமரேசன், செந்தில்வேல், இணை செயலர் பரமசிவம் கலந்து கொண்டனர். விழாவில் விளையாட்டு போட்டிகள், 10 மற்றும் 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

thanks to vasuji blogger
♥♥



மாவட்ட வாரியாக சங்கங்கள்:

01-- சென்னை:
1, தமிழ் நாடு நகை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்,
திருவல்லிக்கேனி

2,பூங்கா நகர் பொன் வெள்ளி நகை தொழிளாலர்கள் நலசங்கம்,

3,தி.நகர் பொன்வெள்ளி நகை தொழிலாளர் சங்கம்,

4,வட சென்னை பொன்வெள்ளி நகை தொழிலாளர் முன்னேற்ற சங்கம்,

5,சென்னை மாநகர பொன்வெள்ளி நகை தொழிலாளர் நல சங்கம், பெரம்பூர்

6,சஞ்சீவிராயன் பேட்டை விஸ்வ பிராமண கிராம அதிகார கமிட்டி

02--அரியலூர்
1,தமிழ் நாடு விஸ்வகர்ம கைவினைஞர் சங்கம், அரியலூர்.

2, ,தமிழ் நாடு விஸ்வகர்ம கைவினைஞர் சங்கம்,
ஜெயம் கொண்டாம்

03-- கோயம்புத்தூர்
1,சான்றிதழ் பெற்ற பொற்பணியாளர் சங்கம்.

2,தமிழ்நாடு அனைத்து தங்க நகை தொழிலாளர் சங்கம்.

3,கோயம்புத்தூர் தங்க நகை தொழிலாளார் யூனியன்.

4,கோயம்புத்தூர் நகை தயாரிப்பாளர்கள் சங்கம்.

5.R,T,M தெலுங்கு விஸ்வகர்ம உறவின் முறை சங்கம்

6,கோவை பாத்திபனூர் விஸ்வக்ஞய உறவின் முறை சங்கம்.

7,பொள்ளாச்சி தாலுகா தங்க நகை தொழிலாளார் சங்கம்

04--கடலூர்
1, தமிழ் நாடு விஸ்வகர்ம கைவினைஞர் சங்கம், சிதம்பரம்.

2,திருப்பாதிரி புலியூர் விஸ்வகர்ம மகாஜன சங்கம்,

3, தமிழ் நாடு விஸ்வகர்ம பொற்கொல்லர் நலச்சங்கம், விருதாசலம்.

4,பன்ரூட்டி நகர பொன் வெள்ளி ஆபரண தொழிலாளர் சங்கம்,

05-- தருமபுரி
1, தருமபுரி பொன்வெள்ளி நகை தொழிலாளர் நலச்சங்கம்

06-- திண்டுக்கல்
1, நிலக்கோட்டை நகை தொழிலாளர்கள் சங்கம்

2,தமிழ்நாடு நகை தொழிலாளர்கள் சங்கம் பழனி

07-- ஈரோடு
1, சத்தியமங்கலம் தாலுகா நகை தொழிலாளர் சங்கம்,

2, கோபி விஸ்வகர்ம ஆபரணதொழிலாளர்கள் சங்கம்,

3, ஈரோடு மாவட்ட விஸ்வேஸ்வரா நல சங்கம்.

08-- காஞ்சிபுரம்
1, காஞ்சிபுரம் வட்டார ஆபரண தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்

2, செங்கல்பட்டு விஸ்வகுல முன்னேற்ற நலச்சங்கம்,

09- கன்னியாகுமாரி
1, கன்னியாகுமாரி மாவட்ட பாரதிய நகை தொழிலளார் சங்கம்

2,பாரதிய நகை தொழிலளார் சங்கம் மார்த்தாண்டம்.

3,பாரதிய நகை தொழிலளார் சங்கம் இரணியல்.

10-- கரூர்
1, கரூர் மாவட்ட நகை தொழிலாளர்கள் முன்னேற்ற நல சங்கம்.

11--கிருஷ்ணகிரி

1, கிருஷ்னகிரி நகர பொன்வெள்ளி நகை தொழிலாளர்கள் நலச்சங்கம்.

2, விஸ்வகர்ம ஜந்தொழிலளர் சங்கம், ஓசூர்.

12-- மதுரை

1, மதுரை சர்ட்டிபிகேட் பொற்கொல்லர் சங்கம்.

2, கைவினைஞகர் தொழிற்சங்க பேரவை.

3, மதுரை மாவட்ட நகை உற்பத்தியாளர்கள் தொழில் சேவை கூட்டுறவு குழுமம்

4, சொளராஸ்ட்ரா பொற்கொல்லர்கள் முன்னேற்ற சங்கம்.

13-- நாகபட்டினம்

1, விஸ்வகர்ம நகை தொழிலாளர்கள் நலச்சங்கம், நாகபட்டினம்.

2, கைவினைஞகர் தொழிற்சங்க பேரவை , மயிலாடுதுறை.

14-- நாமக்கல்

1, நாமக்கல் நகை தொழிலாளர்கள் சங்கம்.

2, ராசிபுரம் ஆபரண தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கம்.

3, திருசெங்கோடு நகர நகை தொழிலாளர் சங்கம்

15--நீலகிரி

1, ???????

16--பெரம்பலூர்

1, தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞகர் சங்கம்

17-- புதுக்கோட்டை

1, புதுக்கோட்டை நகர பொற்கொல்லர் சங்கம்.

2, விஸ்வகர்ம மகாஜன சங்கம், பொன்னமராவதி.

3, மனல்மேல்குடி ஒன்றிய ஆபரண தொழிலாளர்கள்
நலச்சங்கம்.

18- இராமநாதபுரம்
1, விஸ்வகர்மா பொற்கொல்லர் சேவா சங்கம்.
பரமக்குடி

2, நகர் பொற்கொல்லர் தொழிலாளார் சங்கம்,
இராமாநாதபுரம்

3,தெழுங்கு விஸ்வகர்மா சங்கம், பரமக்குடி

19-- சேலம்

1, சேலம் பொன்வெள்ளி நகை தொழிலாளர்கள் நலச்சங்கம்,

2, ஆத்தூர் நகரபொன் வெள்ளி நகை தொழிலாளர்கள் நலச்சங்கம்.

20-- சிவகங்கை

1, நகை தொழில் செந்ய்வோர் நலச்சங்கம் இளையான்குடி.

2, நகை தொழிலாளார்கள் சங்கம்.சிவகங்கை

3, நகர நகை தொழிலாளர்கள் சங்கம்,தேவகோட்டை

4, விஸ்வகர்ம நகை தொழிலாளார்கள் சங்கம், திருப்பத்தூர்.

5காரைகுடி வட்டார நகைதொழிலாளர்கள் சங்கம், காரைகுடி.

21--தேனி

1, கம்பம் நகை வியபாரிகள், நகை தொழிலாளர்கள் சங்கம்.

2, தேனி விஸ்வகர்ம நகை தொழிலாளர்கள் சங்கம்.

3, நகை தொழிலாளர்கள் முன்னேற்றசங்கம், போடி.

4, ஸ்ரீ விஸ்வகர்ம பொற்கொல்லர் இளைஞர் நலச்சங்கம், சின்னமனூர்.

5, பொற்கொல்லர் முன்னேற்ற சங்கம், பெரியகுளம்.

22- தஞ்சாவூர்

1, தஞ்சை மாவட்ட பொற்கொல்லர் சமூக பதுகாப்பு நலச்சங்கம்.

2, விஸ்வகர்ம பொன் தொழிலாளர்கள் நலச்சங்கம், கும்பகோணம்.

3, தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர் சங்கம், பேராவூரணி.

23--திருச்சி
1, திருச்சி மாவட்ட விஸ்வபிரம்மா மகாஜன நலச்சங்கம்.

24-- திருநெல்வேலி

1, நகர பொற்கொல்லர் சங்கம் ,புளியங்குடி

2, நெல்லை நகர பொற்கொல்லர் சங்கம்.ம்நெல்லை.

3, நெல்லை மாவட்ட பொற்கொல்லர் பொதுதொழிலாளர் சங்கம்.மேலகடையநல்லூர்.

4, சங்கரன்கோவில் நகர பொற்கொல்லர் சங்கம்.

5, தென்காசி நகை தொழிலாளார்கள் சங்கம்.

6, நகைதொழிலாளர்கள் சங்கம், அம்பா சமுத்திரம்.

7, நகைதொழிலாளர்கள் சங்கம், பாவூர்சத்திரம்.

25-- திருப்பூர்

1, விஸ்வகர்ம ஆபரண தொழிலாளர் சங்கம், திருப்பூர்.

2, தங்கநகை தயாரிப்பாளர்கள் சங்கம்,அவினாசி.

26--திருவள்ளூர்

1, தமிழ் நாடு கைவினைஞர் சங்கம்.

27-- திருவண்ணாமலை

1, அகில இந்திய விஸ்வகர்ம பேரவை, வந்தவாசி.

2, திருவண்ணாமலை நகை தொழிலாளர் நலசங்கம்.

3, நகை தொழிலாளர் சங்கம், ஆரணி

28-- திருவாரூர்
1, மன்னார்குடி பொற்கொல்லர் கூட்டமைப்பு மேம்பாட்டு சங்கம்.

2, திருவாரூர் நகர ஆபரண தொழிலாளார்கள் சங்கம்.

29-- தூத்துகுடி

1, பாரதிய நகை தொழிலாளர் சங்கம்,தூத்துகுடி.

2, அகில இந்திய நகை தொழிலாளர் சங்கம், சாத்தான்குளம்.

3, நகை தொழிலாளர்கள் சங்கம்,எட்டையாபுரம்.

4, விஸ்வகர்ம நகை தொழிலாளர்கள் சங்கம், கோவில்பட்டி.

30-- வேலூர்

1, அகில இந்திய விஸ்வகர்ம பேரவை, அரக்கோணம்.

2, , அகில இந்திய விஸ்வகர்ம பேரவை, ஆற்காடு.

3, கைவினைஞர் தொழிற்சங்க பேரவை, வேலூர்.

4, கைவினைஞர் தொழிற்சங்க பேரவை, திருப்பத்தூர்.

5,  கைவினைஞர் தொழிற்சங்க பேரவை, ஆம்பூர்.

6, கைவினைஞர் தொழிற்சங்க பேரவை, வாணியம்பாடி.

7,  கைவினைஞர் தொழிற்சங்க பேரவை, வாலாஜ.

8, தமிழ் நாடு விஸ்வகர்ம நண்பர்கள் சங்கம், வேலூர்

31-- விழுப்புரம்

1, விஸ்வகர்ம ஆபரண தொழிலாளர் சங்கம்

2, விஸ்வகர்ம நகை தொழிலாளர்கள் சங்கம், கள்ளகுறிச்சி

3,விஸ்வகர்ம ஆபரண தொழிலாளர் சங்கம், விழுப்புரம்.

4, விஸ்வகர்ம ஆபரண தொழிலாளர் சங்கம், செஞ்சி.

32-- விருதுநகர்

1, விஸ்வஞய பார்த்திபனூர் வகுப்புசங்கம்,விருதுநகர்.

2,விருதுநகர் மாவட்ட நகை தொழிலாளார்சங்கம், ஸ்ரீவில்லி புத்தூர்.

3, விருதுநகர் மாவட்ட பொற்கொல்லர் சங்கம், அருப்புகோட்டை.

4, விஸ்வகர்ம நகை தொழிலாளார்கள் சங்கம்,சிவகாசி.

5,இராஜபாளையம் வட்டார விஸ்வகர்ம பொற்கொல்லர் சங்கம், இராஜபாளையம்.

6, இராஜபாளையம் நகர நகை தொழிலாளர் சங்கம்,இராஜபாளையம்.

33-- பாண்டிசேரி

1, புதுசேரி படைப்பாளி மக்கள் கட்சி,

2,புதுவை பிரதேச விஸ்வகர்ம சமூக சங்கங்களின் கூட்டமைப்பு.

3, காரைபிரதேச விஸ்வகர்ம தொழிலாளர் இளைஞரனி முன்னேற்ற சங்கம், காரக்கால்.

கீழ் கண்ட சங்கங்களுக்கு பொற்கொல்லர் முரசு அனுப்ப பட்டுள்ளது, ( முதல் இதழ்) கிடைக்க பெறாத சங்கங்கள் தகவல் தெரியபடுத்தவும். இதில் இடம்பெறாத சங்கங்கள் இருப்பின் தயவுசெய்து பதிவிடவும், தொடர்பு எண்னுடன்.


தங்கக் கட்டுப்பாடு சட்டம்: அமல்படுத்த கோரிக்கை!

செவ்வாய், 18 நவம்பர் 2008 (09:27 IST)
திண்டுக்கல்: மத்திய அரசு தொழில் கொள்கையில் மாற்றம் செய்து, புதிய மாற்றங்களுடன் தங்க கட்டுப்பாடு சட்டத்தை, நகைத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் திண்டுக்கல் தங்கம் பொன், வெள்ளித் தொழிலாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த சங்கத்தின் 64 வது ஆண்டு கூட்டம் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதற்கு தலைவர் ஆர்.மருதை ஆசாரி தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் அரசு அமைத்துள்ள பொற்கொல்லர் நல வாரியத்துக்கு நகை தொழிலாளரையே தலைவராக நியமிக்கவேண்டும். வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கு அனுபவம் வாய்ந்த நகைத் தொழிலாளரையே நியமிக்க வேண்டும்.

அத்துடன், அவர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும். தொழில் கொள்கையில் மாற்றம் செய்து, தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் மத்திய அரசு புதிய மாற்றங்களுடன் அமல்படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

Wednesday, 27 November 2019

marquee

                                      Sri...
Spinning arrowSpinning arrowSpinning arrowSpinning arrowSpinning arrow


<marquee behavior="slide" direction="right">
<img src="//www.html.am/images/html-codes/marquees/spinning-arrow-right.gif" width="50" height="38" alt="Spinning arrow" />
<img src="//www.html.am/images/html-codes/marquees/spinning-arrow-right.gif" width="50" height="38" alt="Spinning arrow" />
<img src="//www.html.am/images/html-codes/marquees/spinning-arrow-right.gif" width="50" height="38" alt="Spinning arrow" />
<img src="//www.html.am/images/html-codes/marquees/spinning-arrow-right.gif" width="50" height="38" alt="Spinning arrow" />
<img src="//www.html.am/images/html-codes/marquees/spinning-arrow-right.gif" width="50" height="38" alt="Spinning arrow" />

</marquee>


மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,