YouTube

Wikipedia

Search results

Recent

Categories

Ad Banner

Blogroll

About

Search This Blog

JavaScript Free Code
HTML Free Code
JavaScript Free Code
JavaScript Free Code
JavaScript Free Code

Recent Comments

Recent Post

BTemplates.com

About

Text Widget



Labels

About

Type your text here JavaScript Free Code

Blogroll

Pages - Menu

Weekly post

Thursday, 25 May 2017

நம் மூளைக்குள் நிகழும் அதிசயம்

நம் மூளைக்குள் நிகழும் அதிசயம்





பிட்யூட்டரி சுரப்பி:

பிட்யூட்டரி சுரப்பியினை தலைமை சுரப்பி என்று குறிப்பிடுவது உண்டு. காரணம் இது மற்ற சுரப்பிகளை கட்டுபடுத்துகின்றது. பல ஆய்வுகளின் முடிவு படி இச்சுரப்பி இல்லாவிடில் நம் உடலின் செயல்பாடுகள் இருப்பதே கடினம்.

இத்தனை மாபெரும் வேலையினைச் செய்யும் இச்சுரப்பியின் அளவு ஒரு பட்டாணி அளவுதான். மூளையில் ஹைபோ தலாமஸ்- பீனியல் சுரப்பி நடுவே மூக்கின் உச்சியின் பின்புறமாக அமைந்துள்ளது.
மிக மெல்லிய ரத்த குழாய்களும், நரம்புகளும் இதனை மூளையுடன் இணைக்கின்றன. பல சுரப்பிகளை கட்டுப்படுத்தும் அதிபதியாக இது விளங்கினாலும் இதற்கு உத்தரவுகள் ஹைபோ தலாமஸ் பகுதியிலிருந்தே கிடைக்கின்றன. பொதுவாக இச்சுரப்பிகளுக்கு நீள செயின் இணைப்பு உண்டு. இதன் மூலம் அனுப்ப வேண்டிய கட்டளைகளை இவைகள் அனுப்பும்.

ஹைபோ தலாமஸ் பிட்யூட்டரிக்கு ஹார்மோன் மூலம் கட்டளைகள் இடும். அதன் படியே பிட்யூட்டரி மற்ற சுரப்பிகளுக்கு எவ்வளவு சுரக்க வேண்டும் என்ற கட்டளையினை அனுப்பும். இது மட்டுமல்லாது சில உறுப்புகளுக்காக சில ஹார்மோன்களையும் பிட்யூட்டரி உற்பத்தி செய்யும்.

* ஆக்ஸிடோஸின் என்ற ஹார்மோனால் குழந்தை பிறப்பினை கருப்பை சுருங்கி விரியச் செய்து பிறப்பினை ஏதுவாக்கும். பெண் மார்பகங்களில் பால் உற்பத்தி உருவாகும்.
* வளோ பெர்ஸின் என்ற ஹார்மோனை சிறு நீரகத்திற்காக உருவாக்கும்.
* என் டார்பின் என்ற ஹார்மோன் மூளை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்காக உருவாக்கப்படுகிறது.
* வளர்ச்சி ஹார்மோன் தசை எலும்புகளுக்காக
* ப்ரோலக்டின்- தாய் பால் உற்பத்திக்காக என பல ஹார்மோன்களையும் உருவாக்குகின்றது. அநேக ஹர்மோன்கள் பகலில் உயர்நிலையிலும் இரவில் குறைந்த நிலையிலும் இருக்கும். சில ஹார்மோன்கள் மாதவிலக்கு மற்றும் அதன் சுழற்சி போன்றவற்றினை சுற்றி இருக்கும்.

ஹைபோதலாமஸ், பிட்யூட்டரியும் இணைந்து உடலுக்கு அனைத்து அத்தியாவசிய செயல்களையும் ஆற்றுகின்றன. உடல் சூடு, பசி, தாகம், சோர்வு, வளர்ச்சி, தூக்கம், எடை, தாம்பத்ய உறவு, வலி, நிவாரணம், ரத்த அழுத்தம், மன உளைச்சல், கோபதாபம் என அநேக செயல்களை செய்கின்றன. இந்த ஹைபோதலாமஸ் ஒரு பாதாம் பருப்பின் அளவு தான் இருக்கும். மேலும் ஹைபோதலாமஸ், பிட்யூட்டரியும் இணைந்து பீனியல் சுரப்பியினை ஊக்குவிக்கின்றன.

இதையெல்லாம் நான் எழுதுவதன் காரணம் இந்த மனித படைப்பின் அதிசயங்களை நீங்கள் அறிய வேண்டும் என்பதுதான். பீனியல் சுரப்பி மூளையின் நடுவில் பிட்யூட்டரி சுரப்பிக்கு பின்னும் மேலுமாக இருக்கின்றது. மனம், நோய் எதிர்ப்பு சக்தி, மன உளைச்சல், முறையான தூக்கம் இவை அனைத்திற்குமே பீனியல் சுரக்கும் மெலடோனின் பொறுப்பாகின்றது.

இவைகளை அடிப்படையாக வைத்துதான் நம் முன்னோர் புருவ மத்தியின் கவனத்தினை வைத்து தியானம் செய்யச்சொன்னார்கள்.

* பல வகை மூச்சுப்பயிற்சிகளின் மூலம் இவைகளை ஊக்குவித்து உடல் ஆரோக்கியத்தினை கூட்டினார்கள்.
* புருவ மத்தியில் மெதுவாக சில முறை தட்டச்சொன்னார்கள்.
* லேசான அழுத்தம் கொடுக்கச் சொன்னார்கள்.
* இரு கண்களை குவித்து புருவ மத்தியில் சில நொடிகள் பார்க்கச்சொன்னார்கள்.


Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்