YouTube

Wikipedia

Search results

Recent

Categories

Ad Banner

Blogroll

About

Search This Blog

JavaScript Free Code
HTML Free Code
JavaScript Free Code
JavaScript Free Code
JavaScript Free Code

Recent Comments

Recent Post

BTemplates.com

About

Text Widget



Labels

About

Type your text here JavaScript Free Code

Blogroll

Pages - Menu

Weekly post

Wednesday, 17 May 2017

ஊதுபத்தி ஏற்றுவதால் வீட்டில் ஆபத்து உள்ளதா?

ஊதுபத்தி ஏற்றுவதால் வீட்டில் ஆபத்து உள்ளதா?

பொதுவாக அனைவரது வீட்டிலும் கடவுளை வணங்கி தொழுவதற்கு, வீட்டில் நறுமணம் வீசுவதற்கும் ஊதுபத்தி ஏற்றும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகின்றது.
ஆனால் பல மலர்களின் வாசனைகள் கிடைக்கும் இந்த ஊதுபத்தியில், ரசாயனப் பொருட்கள் அதிகமாக கலந்திருப்பதால், அது நமது உடல்நலத்திற்கு பல வகையான ஆபத்தை ஏற்படுத்துகிறது.
எனவே ஊதுபத்தியின் மூலம் நமது உடல் நலத்திற்கு எவ்விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
ஊதுபத்தியினால் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள்
வீட்டில் ஊதுபத்தி பயன்படுத்துவதால், காற்றில் கார்பன் மோனாக்சைடு கலக்கிறது. இதனால் காற்று மாசுபாடு அடைகிறது. இதனை நாம் சுவாசிக்கும் போது, நமது நுரையீரல் பகுதியில் அழற்சி மற்றும் சுவாச கோளாறுகள், இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
ஊதுபத்தி குச்சிகளில், கந்தக டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் மற்றும் ஃபார்மல்டிஹைடை ஆக்சைடுகள் போன்றவற்றின் கலப்புகள் அதிகமாக இருக்கிறது. இது நமது நுரையீரலில் அடைப்பௌ உண்டாக்கி, ஆஸ்துமா பிரச்சனை ஏற்படுத்துகிறது.
வெகுநாட்கள் வரை இருக்கும் ஊதுபத்திகளை வைத்து இருந்து அதை பயன்படுத்துவதன் மூலம் அதிலிருந்து வரும் புகையானது, நமது மென்மையான சருமத்தோடு ஊடுருவும் போது தலைவலி, அரிப்பு மற்றும் சரும அழற்சிகளை ஏற்படுத்துகிறது.
நாம் தினமும் அளவுக்கு அதிகமாக நம்முடைய வீட்டில் ஊதுபத்தியை பயன்படுத்தி வந்தால், அதில் உள்ள நச்சுத் தன்மை வாய்ந்த புகை நமது உடலின் நுரையீரலை சிதைத்து புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் அதிகமாக உள்ளது.
தினந்தோறும் ஊதுபத்தியை பயன்படுத்துவது நம்முடைய இதயத்திற்கு எதிர்வினை விளைவுகளை உண்டாக்குகிறது. மேலும் இது நமது இரத்த நாளங்களில் அழற்சிகளை உருவாக்குகிறது.






Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்