YouTube

Wikipedia

Search results

Recent

Categories

Ad Banner

Blogroll

About

Search This Blog

JavaScript Free Code
HTML Free Code
JavaScript Free Code
JavaScript Free Code
JavaScript Free Code

Recent Comments

Recent Post

BTemplates.com

About

Text Widget



Labels

About

Type your text here JavaScript Free Code

Blogroll

Pages - Menu

Weekly post

Monday, 23 October 2017

கர்ப்பிணிகளே! குழந்தை அழகா.. வெள்ளையா.. பிறக்கணுமா? அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க…

கர்ப்பிணிகளே! குழந்தை அழகா.. வெள்ளையா.. பிறக்கணுமா? அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க…




அனைத்து கர்ப்பிணிகளுக்குமே வயிற்றில் வளரும் குழந்தை நன்கு வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக அவர்கள் நமது முன்னோர்கள் சொன்ன சில உணவுகளை உட்கொண்டு வருகின்றனர். மேலும் எவ்வளவு தான் படிப்பறிவு உள்ளவர்களாக இருந்தாலும், முன்னோர்கள் சொல்வது சரியாகத் தான் இருக்கும் என்று நம்பி, வயிற்றில் வளரும் குழந்தை வெள்ளையாவதற்கு ஒருசில உணவுகளை உட்கொள்கின்றனர்.

ஆனால் நிபுணர்களின் கருத்துப்படி, உண்மையில் வயிற்றில் வளரும் குழந்தையின் நிறமானது உண்ணும் உணவில் இல்லை. அது தாய் மற்றும் தந்தையின் நிறங்கள் கலந்து தான் பிறக்கும் என்று சொல்கின்றனர். இருப்பினும், இந்திய மக்களிடம் இந்த நம்பிக்கை மட்டும் போகாமல் இருக்கிறது.
அப்படி நீங்களும் உண்ணும் உணவுகளால் குழந்தையின் நிறம் அதிகரிக்கும் என்று நம்பினால், முன்னோர்கள் கூறிய சில உணவுப் பொருட்களின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்தகைய உணவுகளால் நிச்சயம் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. சரி, இப்போது எந்த உணவுப் பொருட்களை உட்கொண்டால் வயிற்றில் வளரும் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்று பார்ப்போம்.

குங்குமப்பூ பால்
நிறைய கர்ப்பிணிகள், கர்ப்ப காலத்தில் குழந்தை வெள்ளையாக பிறப்பதற்கு குங்குமப்பூ பால் தான் குடிப்பார்கள். ஏனெனில் குங்குமப்பூவானது வயிற்றில் வளரும் குழந்தையின் நிறத்தை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை தான்.

தேங்காய்
வயிற்றில் வளரும் குழந்தை வெள்ளையாக பிறக்க வேண்டுமானால், தேங்காய் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் தேங்காயின் உட்பகுதி வெள்ளையாக இருப்பதால், இதனை உட்கொண்டால், வயிற்றினுள் வளரும் குழந்தையும் வெள்ளையாக பிறக்கும் என்ற நம்பிக்கையினால் தான்.

பால்
கர்ப்பிணிகள் பாலை அதிகம் குடிக்க வேண்டுமென்று சொல்வார்கள். ஏனென்றால் பாலை கர்ப்பிணிகள் அதிகம் குடித்தால், பால் போன்ற நிறத்தில் குழந்தை பிறக்குமாம்.

முட்டை
கிராமங்களில் உள்ள சில மக்கள், கர்ப்பிணிகள் இரண்டாம் மூன்று மாத காலத்தில் முட்டையை அதிகம் சாப்பிட்டால், குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்று சொல்கின்றனர்.

பாதாம்
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பாதாமை சாப்பிட்டால், பிறக்கும் குழந்தை நல்ல நிறத்தில் பிறக்கும் என்ற நம்பிக்கையும் நம் இந்திய மக்களிடையே உள்ளது. அதிலும் பாதாம் பாலை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், குழந்தை நன்கு வெள்ளையாக பிறக்கும் என்று சொல்கின்றனர்.

நெய்
ஆய்வுகளின் படி கர்ப்பிணிகள் நெய்யை உணவில் சேர்த்து வந்தால், பிரசவத்தின் போது அதிகப்படியான வலி ஏற்படுவதைத் தடுக்கலாம் என்று சொல்கின்றனர். ஆனால் மற்றொரு பக்கம், நெய் சாப்பிட்டா,ல அது குந்தையின் சரும நிறத்தை அதிகரிக்கும் என்று சொல்கின்றனர். என்ன தான் இருக்கட்டும், கர்ப்பிணிகள் எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்ப்பது மிகவும் நல்லது.

ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தை கர்ப்பிணிகள் மூன்று மாதம் கழித்து சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி சத்தானது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், குழந்தையின் சரும நிறத்தையும் அதிகரிக்குமாம்.

சோம்பு
கர்ப்பிணிகள் சோம்பு ஊற வைத்த நீரை குடித்து வந்தால், அது குழந்தையின் நிறத்தை அதிகரிக்கும் என்று சிலர் சொல்கின்றனர். ஆனால் இந்த நீரை கர்ப்பிணிகள் காலையில் குடித்தால், சோர்வு ஏற்படுவதைத் தடுக்கலாம்





Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்