YouTube

Wikipedia

Search results

Recent

Categories

Ad Banner

Blogroll

About

Search This Blog

JavaScript Free Code
HTML Free Code
JavaScript Free Code
JavaScript Free Code
JavaScript Free Code

Recent Comments

Recent Post

BTemplates.com

About

Text Widget



Labels

About

Type your text here JavaScript Free Code

Blogroll

Pages - Menu

Weekly post

Sunday, 28 January 2018

சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் பீன்ஸ்

சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் பீன்ஸ்

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு பீன்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் உள்ள சத்துக்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் பீன்ஸ்
பீன்ஸில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனிசு மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.


வேகவைத்த காய்களைத்தான் மனிதக் குடலானது எளிதில் சீரணிக்கும். மற்றும் அதன் சத்துகளை எளிதாக உட்கிரகிக்கும். பீன்ஸ் சாப்பிட்டால், அது குடலியக்கத்தை சீராக்கி, செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.

100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து 9 சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. 

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு பீன்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில் அதில் உள்ள கார்போஹைட்ரேட் மெதுவாக கரைவதால் அது இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதைத் தடுக்கும்.

பீன்ஸில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டின், நார்ச்சத்து, காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துக்களான பொட்டாசியம், ஃபோலேட், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனிஷ், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் இருப்பதால், இது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதைத் தடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். இதயத்திற்கு சிறந்தது.

பீன்ஸில் உள்ள சிலிகான் என்னும் கனிமச்சத்து எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும். மேலும் மற்ற காய்கறிகளை விட இந்த காய்கறியில் உள்ள சிலிகான் எளிதில் உறிஞ்சப்படுவதோடு, செரிமானமும் அடையும்.

சிலருக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் உள்ள க்ளுடனால் அலர்ஜி ஏற்படலாம். அத்தகையவர்கள் தானியங்களுக்கு பதிலாக பீன்ஸ் சாப்பிட்டால், தானியங்களால் கிடைக்கக் கூடிய சத்துக்களை பீன்ஸ் மூலம் பெறலாம்.

பச்சை பீன்ஸில் உள்ள கரோட்டினாய்டுகள் சருமத்தின் தரத்தை அதிகரித்து, முதுமையை எதிர்த்துப் போராடும்.

Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்