YouTube

Wikipedia

Search results

Recent

Categories

Ad Banner

Blogroll

About

Search This Blog

JavaScript Free Code
HTML Free Code
JavaScript Free Code
JavaScript Free Code
JavaScript Free Code

Recent Comments

Recent Post

BTemplates.com

About

Text Widget



Labels

About

Type your text here JavaScript Free Code

Blogroll

Pages - Menu

Weekly post

Thursday, 26 July 2018

இந்தியாவின் போக்குவரத்துகள் - India's transport



இந்தியாவின் போக்குவரத்துகள் - India's transport



இந்தியாவில் முதன்முதலாக 1902-ம் ஆண்டு காவிரி ஆற்றின் மீது கர்நாடகாவில் உள்ள சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சிப் பகுதியில்தான் முதல் நீர்மின்சக்தித் திட்டம் துவங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகருக்கு மின்சக்தி வழங்குவதற்காக துவங்கப்பட்டதுதான் டாடா நீர்மின்சக்தித் திட்டம்.
தமிழகத்தில் பைக்காரா நீர்மின்சக்தித் திட்டமே முதல் திட்டமாகும்.
இமயமலையின் வட பகுதியான மாண்டி என்னும் பகுதியில்தான் இந்தியாவின் முதல் திட்டம் துவங்கியது எனலாம்.
மேட்டூர் திட்டம் - தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூரில் கட்டப்பட்டுள்ள ஸ்டான்லி அணையிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
கர்நாடகாவில் மலப்ரபா ஆற்றின் மீது மலப்ரபா திட்டம் அமைந்துள்ளது.
கேரளாவில் பெரியாற்றின் மீது இடுக்கி திட்டம் அமைந்துள்ளது.

கேரளாவில் சபரகிரி நதியில் 300 மெகாவாட் திறனுடன் சபரகிரி திட்டம் அமைந்துள்ளது.
கோதாவரி மீது ஆந்திரப்பிரதேசத்தில் போச்சம்பேட் திட்டம் அமைந்துள்ளது.
பலிமேளா திட்டம்உக்காயா திட்டம் - ஒரிசாவில் அமைந்துள்ளது.
உத்திரப்பிரதேசம் ராம்கங்கா நதியின் மீது ராம்கங்கா திட்டம் அமைந்துள்ளது.
ஒரிசாவில் மகாநதி மீது மகாநதி டெல்டா திட்டம் அமைந்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் கங்கை மற்றும் பாகீரதி நதிகளின் மீது ஃபராக்கா திட்டம் அமைந்துள்ளது.
குஜராத்தில் தபதி ஆற்றின் மீது காக்ரபாரா திட்டம் அமைந்துள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் நர்மதையின் துணை ஆறு தவா ஆற்றின் மாது தவா திட்டம் அமைந்துள்ளது.
போங் அணை பியாஸ் நதியின் மீது பியாஸ் திட்டம் அமைந்துள்லது. இத்திட்டத்தால் பஞ்சாப்அரியானா மற்றும் இராஜஸ்தான் மாநிலங்கள் பயன்பெற்று வருகின்றன.
சலால் திட்டம் - ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் கங்கை மற்றும் பாகீரதி நதிகளின் மீது ஃபராக்கா திட்டம் அமைந்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் முரளி ஆற்றின் மீது மயூராக்ஷி திட்டம் அமைந்துள்ளது.
மத்தியப்பிரதேசம்குஜராத்இராஜஸ்தான்,மகாராஷ்டிரா ஆகியவற்றால் நர்மதை மீது அமைக்கப்பட்டது - நர்மதா பள்ளத்தாக்குத் திட்டம்.
நர்மதை நதி மீது சர்தார் சரோவர் அணை கட்டப்பட்டுள்ளது.
இந்திய அரசு மற்றும் உத்திரப்பிரதேசத்தின் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்ட திட்டம் - தேரி மின்சக்தி திட்டம். இத்திட்டத்தின் நோக்கம் 2400 மெகாவாட் மின் உற்பத்தியே.
ஃபராக்கா திட்டம் - இந்தியாவும் பங்காளதேஷூம் பயன்பெற்று வரும் திட்டம் ஃபராக்கா திட்டம். மேற்கு வங்காளத்தில் கங்கை நதி மீது அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டமே கொல்கத்தாவிற்கு குடிநீர் வழங்கும் திட்டமாகும்.
கெய்னா திட்டம் - இத்திட்டத்தால் மகாராஷ்டிரா மாநிலம் பயன்பெற்று வருகிறது. சமீபத்தில் நிலநடுக்கத்தால் இத்திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய - போக்குவரத்து
இந்திய போக்குவரத்தின் அடிப்படை பரிமாணங்கள் இரயில் போக்குவரத்துசாலைப் போக்குவரத்து,நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வான்வழிப்போக்குவரத்து எனலாம்.
இந்திய இருப்புப் பாதையானது 16 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு பொது மேலாளரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய இரயில்வே அமைப்பைக் கொண்ட நாடு இந்தியா.
உலகிலேயே அதிக பணியாளர்களைக் கொண்டு ஒரே துறையாக செயல்பட்டு வரும் துறை - இந்திய ரயில்வே துறை.
இந்தியாவின் முதல் இருப்புப் பாதை பம்பாயிலிருந்து தானா வரை(34 கி.மீட்டர்) 1853ல் துவங்கப்பட்டது.
தற்போது இந்திய இருப்புப் பாதைகளின் நீளம் சுமார்63,140 கி.மீ.
இந்திய இரயில்வே தினமும் 14,444தொடர்வண்டிகளை இயக்கி வருகின்றன.
* 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மொத்தம்47 தொடர்வண்டி அமைப்புகள் இருந்து வந்தன. அவைகள் 1951-ல் தேசியமயமாக்கப்பட்டது. அதாவது நாட்டுடமையாக்கப்பட்டது.
இந்திய இரயில்வே Brod Guage - 50 சசவீதமும், Metre Gauge - 43 சதவீதமும், Narrow Gauge -  7 சதவீதம் என்று மூன்று வகையான இருப்புப் பாதைகளை அமைத்து செயல்பட்டு வருகின்றன.
இந்திய ரயில்வே 16 மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. இதில் வடக்கு இரயில்வே சுமார் 11000 கி.மீ நீள இருப்புப் பாதையுடன் மிக நீண்டதாக விளங்குகிறது.
இந்திய இரயில்வே 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி தனது 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.
கொங்கன் இரயில்வே திட்டம் மார்ச் 1990ல் துவங்கப்பட்டது. இத்திட்டம் கோவாமகாராஷ்டிரா,கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களை குறுகிய வழியில் இணைக்கும் ஒரு திட்டமாகும். இத்திட்டம் சுமார் 760 கி.மீ. தூரத்தை இணைக்கிறது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சதாப்தி அதிவேக இரயில் இயங்கி வருகின்றன.
புதுதில்லிக்கும் மும்பைக்கும் இடையே செல்லும் அதிவிரைவு இரயில்களிலும்ராஜஸ்தானில் இயங்கக்கூடிய அரண்மனை இராஜஸ்தானி இரயிலிலும் தொலைபேசி வசதிகள் செய்யப்பட்ட இரயில்கள் இயங்கி வருகின்றன.
* 1994 ஆம் ஆண்டு முதல் அதிவிரைவு இரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது இந்திய இரயில்வே.
* 1985-ல் நீராவி இரயில் இயந்திரங்கள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது.
* 1995-ல் இரயில் முன்பதிவு முழுவதும் கணினி மயமாக்கப்பட்டது.
இந்திய இரயில்வே மண்டலங்கள் மற்றும் தலைமையிடம்,தொடங்கப்பட்ட ஆண்டுபயணிக்கும் தூரங்கள்(கிமீ):
01. வடக்கு இரயில்வே (NR ) 1952 -ம் ஆண்டு முதல் 6968கிமீ தூரம் தலைமையிடம் - தில்லி
02. வடகிழக்கு இரயில்வே (NER ) 14.4.1952-ம் ஆண்டு முதல் 3667 கி.மீ தூரம் தலைமையிடம் கோரக்பூர்.
03. வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே (NFR ) 15.01.1958 -ம் ஆண்டு முதல் 3907 கி.மீ தலைமையிடம் - குவஹாத்தி
04. கிழக்கு இரயில்வே (ER ) 1952-ம் ஆண்டு முதல் 2414கி.மீ தலைமையிடம் கொல்கத்தா.
05. தென்கிழக்கு இரயில்வே (SER ) 1955-ம் ஆண்டு முதல் 2631 கி.மீ. தலைமையிடம் கொல்கத்தா.
06. தென்மத்திய இரயில்வே (SCR ) 02.10.1966 -ம் ஆண்டு முதல் 5803 கி.மீ தலைமையிடம் செகந்திராபாத்.
07. தென்னக இரயில்வே (SR ) 14.04.1951 -ம் ஆண்டு முதல் 5098 கி.மீ தலைமையிடம் சென்னை.
08. மத்திய இரயில்வே (CR)  05.11.1951 -ம் ஆண்டு முதல்3905 கி.மீ தலைமையிடம் மும்பை
09. மேற்கு இரயில்வே (WR) 05.11.1951 -ம் ஆண்டு முதல் 6182 கி.மீ தலைமையிடம் மும்பை
10. தென்மேற்கு இரயில்வே (SWR) 01.04.2003-ம் ஆண்டு முதல் 3177 கி.மீ தலைமையிடம் ஹூப்ளி
11. வடமேற்கு இரயில்வே (NWR) 01.10.2002 -ம் ஆண்டு முதல் 5459 கி.மீ. தலைமையிடம் ஜெய்ப்பூர்
12. மேற்குமத்திய இரயில்வே (WCR)  01.04.2003 -ம் ஆண்டு 2965 கி.மீ. தலைமையிடம் ஜபல்பூர்
13. வடமத்திய இரயில்வே (NCR) 01.04.2003 -ம் ஆண்டு முதல் 3151 கி.மீ. தலைமையிடம் அலகாபாத்
14. தென்கிழக்குமத்திய இரயில்வே (SECR)  01.04.2003 -ம் ஆண்டு முதல் 2447 கி.மீ. தலைமையிடம் பிலாஸ்பூர்
15. கிழக்குக்கடற்கரை இரயில்வே (ECoR) 01.04.2003 -ம் ஆண்டு முதல் 2572 கி.மீ. தலைமையிடம் புவனேஸ்வர்
16. கிழக்குமத்திய இரயில்வே (ECR) 01.10.2002 -ம் தேதி ஆண்டு முதல் 3628 கி.மீ. தலைமையிடம் ஹாஜிபூர்
சாலைப் போக்குவரத்து
இந்தியாவில் 1996 ஆம் ஆண்டு வரையிலான மதிப்பீட்டின்படி இந்தியாவில் 33 லட்சம் கி.மீ.க்கும் அதிகமான தொலைவி்ற்கு சாலை வசதிகள் உள்ளன.
இந்திய மாநிலங்களில் கர்நாடகா மிக நீண்ட சாலைகளுடன் (64000 கி.மீ) முதலிடத்தை பெற்று வருகிறது.
சாலைகளை பொருத்தவரை தேசிய நெடுஞ்சாலைகள்மாநில நெடுஞ்சாலைகள்கிராம வழிச் சாலைகள்சர்வதேச சாலைகள் என்று பல வகைகளில் செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவின் எல்லா மாநிலங்களின் தலைநகரையும் இணைக்கும் விதமாக சுமார் 30 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன.
தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் தங்கநாற்கரத் திட்டம் (Golden Quardrilateral Connecting four Metropolican Cities) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நான்கு முக்கிய நகரங்களான தில்லிமும்பை,சென்னை மற்றும் கல்கத்தா ஆகியவை இணைக்கப்பட உள்ளன.(5952 கி.மீ)
வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் விதமாக சுமார்7300 கி.மீ நீளத்தில் ஸ்ரீநகர் முதல் கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேசி நெடுஞ்சாலைகளுக்கான திட்டங்கள் அனைத்தையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது.
இந்திய சாலை கட்டுமான நிறுவனம் 562.88 கோடி இழப்பால்தொழில் தகராறுகள் சட்டம் 1947ன் கீழ் இந்நிறுவனம் 2000ம் ஆண்டு களைக்கப்பட்டது
வான்வழிப் போக்குவரத்து
இந்தியாவில் மொத்தம் சர்வதேச விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை: 01.இந்திரகாந்தி சர்வதேச விமான நிலையம்பாலம்,தில்லி 02. டம் டம் விமான நிலையம். 03. கல்கத்தா,சாந்தா குரூஸ் விமான நிலையம்கல்கத்தா 04.சென்னையில் மீனம்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா சர்வதேச விமான நிலையம் 05. கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்.
ஏர் இந்தியா நிறுவனம் 1953-ல் தோற்றுவிக்கப்பட்டு1998 ஆம் ஆண்டு வரை சுமார் 90 நாடுகளுடன் விமானத் தொடர்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டு செயல்பட்டு வருகிறது.
ஏர் இந்தியா நிறுவனம் வெளிநாட்டு வான்வழிப் போக்குவரத்தையும் மேற்கொண்டு வருகிறது.
* 1953-ல் தோற்றுவிக்கப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
* Pawan Hans Limited என்ற நிறுவனம் தேவைப்படும் நபர்களுக்கு ஹெலிகாப்டர் சரிவீஸ் வழங்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. பொதுவாக எண்ணெய் நிறுவனங்கள் இவற்றின் பயன்பாட்டைப் பெரிதும் பெற்று வருகின்றன.

நீர்வழிப் போக்குவரத்து
உள்நாட்டு நீர்வழிகளின் மேம்பாட்டிற்காக 1985-ல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி கப்பல் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் 1986 அக்டோபர் 27-ல் இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் அமைக்கப்பட்டது.
உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமையகம் - உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ளது.
இந்தியாவின் பன்னாட்டு வர்த்தகத்தில் நீர்வழிப்பாதை போக்குவரத்து மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.
வளரும் நாடுகளிடையே சரக்குக் கப்பல்களின் நிலையில் இந்தியா 15-வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் பெரிய துறைமுகங்களும்சிறிய துறைமுகங்களும் என இரு துறைமுகங்கள் செயல்பட்டு வருகின்றன. 12 பெரிய துறைமுகங்கள் அனைத்தும் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
மேற்குக் கடற்கரையில் கண்ட்லாமும்பை,மர்மகோவாமங்களூர் மற்றும் கொச்சி துறைமுகங்களும்கிழக்குக் கடற்கரையில் கொல்கத்தாபாரதீப் விசாகப்பட்டினம்,
சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களும் அமைந்துள்ளன.
கண்ட்லா துறைமுகம் ஒரு Tidal Port ஆகும்.
விசாகப் பட்டினம் துறைமுகம் ஆழமிகுந்த துறைமுகமாக செயல்பட்டு வருகிறது.
சென்னை துறைமுகம் ஒரு செயற்கைத் துறைமுகமாகும்.
சமீப காலமாக தமிழகத்தின் எண்ணூர் துறைமுகம்12-வது பெரிய துறைமுகமாக செயல்பட்டு வருகிறது.
மும்பை ஒரு சிறந்த இயற்கைத் துறைமுகமாகும். சூயஸ் கால்வாய் வழியாக வரும் கப்பல்கள் மும்பையில் தங்கிப் பின்னர் செல்கின்றன.
மேற்கு ஐரோப்பிய ஆப்பிரிக்க நாடுகளை நோக்கியிருக்கும் மும்பை துறைமுகத்தை இந்தியாவின் மேற்கு வாயில் என்பர். இதுவே இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம் மற்றும் முதல் துறைமுகமாகும்.
மும்பை துறைமுகத்தின் நெரிசலைத் தவிர்ப்பதற்காக நவஹேவா என்னுமிடத்தில் கட்டப்பட்ட துறைமுகம் ஜவகர்லால் நேரு துறைமுகம் ஆகும். இது ஒரு நவீன துறைமுகம் ஆகும்.
போர்ச்சுகீசிய துறைமுகமாக இருந்த மர்மகோவா துறைமுகமும் ஒரு முக்கிய இந்திய இயற்கைத் துறைமுகமாகும். இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் இரும்புத் தாதுவில் சுமார் 60 சதவிதம் இத்துறைமுகத்தின் வழியாகவே ஏற்றுமதியாகிறது.
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள புதிய மங்களூர் துறைமுகம் குதிரேமுக் என்ற இடத்தில் உள்ள இரும்புத் தாதுக்களை ஏற்றுமதி செய்ய இத்துறைமுகம் பயன்படுகிறது.
நீர்வழிப் போக்குவரத்தில் அலகாபாத் முதல் ஹால்தியா வரையிலான நீர்வழிப்பாதை NW-1 என்று குறிப்பிடப்படுகிறது.



மேலும் தகவல்களுக்கு 👇 Please click 👇 http://vimaljewelswork.business.site https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்