YouTube

Wikipedia

Search results

Recent

Categories

Ad Banner

Blogroll

About

Search This Blog

JavaScript Free Code
HTML Free Code
JavaScript Free Code
JavaScript Free Code
JavaScript Free Code

Recent Comments

Recent Post

BTemplates.com

About

Text Widget



Labels

About

Type your text here JavaScript Free Code

Blogroll

Pages - Menu

Weekly post

Friday, 8 February 2019

மனநோயில் இருந்து மீட்டெடுக்க முடியும்

மனநோயில் இருந்து மீட்டெடுக்க முடியும்

மனநலத்தை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதை, என்ன மாதிரியான கவனிப்பு கொடுக்கப்படுகிறது என்பதை வறுமை, கல்வியறிவு போன்றவையே தீர்மானிக்கின்றன.

மனநோயில் இருந்து மீட்டெடுக்க முடியும்
உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரப்படி,



 நம் நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்ட மனநோயாளிகளில், 10 சதவீதத்தினருக்கு மட்டுமே மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் வசதி கிடைக்கின்றது. மீதி பேர் அதாவது, பெருவாரியான மனநோயாளிகள் தங்கள் வீட்டிலேயே அவர்களின் குடும்பத்தாரால் பராமரிக்கப்படுகின்றனர்.

மனநோய் என்பது பேய் பிடித்தல், முற்பிறவியில் செய்த பாவங்களின் பலன், பில்லி சூனியம் போன்றவற்றால் வருவது என இந்தியாவின் பல பகுதிகளில் பாரம்பரியமாக நம்பப்படுகிறது. வேரூன்றி இருக்கும் பரவலான மூடநம்பிக்கைகள், தவறான தகவல்கள் ஆகியவற்றால் இத்தகைய உளவியல் பிரச்சினைகளுக்கு பணம் பறிக்கும் சாமியார்கள், மந்திரவாதிகள் ஆகியோரின் உதவியைத்தான் முதலில் நாடுகிறார்கள். உளவியல் நிறுவனம் ஒன்று, 198 மனநோயாளிகளுக்கான சிகிச்சைகள் குறித்து செய்த மதிப்பாய்வில் 45 சதவீதத்தினர் சாமியார்களிடம்தான் முதன்முதலில் போயிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.


இந்தியாவின் மிக மிக குறைந்த அளவிலான நிதியே மனநலத்துக்கு ஒதுக்கப்படுகிறது. ஒரு லட்சம் மக்களுக்கு 0.036 சதவீதம் என்ற அளவில்தான் மனநல மருத்துவர்கள் இருக்கிறார்கள். 2001-ல் செய்யப்பட்ட ஓர் ஆய்வில், மனப்பிறழ்வு போன்ற நோய்களுக்கு மரபணு, தலைமுறை ஆகியவற்றை காரணமாக உயர்கல்வி பெற்றவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். படிக்காதவர்கள், குறைந்த படிப்புள்ளவர்கள் பேய், பிசாசு இவற்றை காரணமாக காட்டுகிறார்கள். மனநலத்தை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதை, என்ன மாதிரியான கவனிப்பு கொடுக்கப்படுகிறது என்பதை வறுமை, கல்வியறிவு போன்றவையே தீர்மானிக்கின்றன.

மனநோயாளிகள் பற்றிய தவறான புரிதல்களுக்கு ஆண்டாண்டு காலமாக நம்முள் பதிந்துள்ள மூட நம்பிக்கைகள், அறியாமை இவையே காரணம். ஆரம்பத்திலேயே அறிகுறிகளை கண்டுபிடித்து தரமான சிகிச்சை அளிப்பதை தடுப்பதும் இவையே. மனநோய் ஓர் அவமான சின்னமாக கருதப்படுவதால், பல தருணங்களில் மனநோயாளிகள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுகின்றனர்.

அதிலும் பெண் நோயாளிகள் இருந்தால் குடும்பத்தினர் அவமானமாக கருதி அவர்களை மறைத்துவைக்கிறார்கள். மனநோய் சிகிச்சையில் முக்கியமான விஷயம், சில மாதங்கள் கழித்தே பலனை அறிய முடியும் என்பதால், மனநோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் மருந்து தொடர்ந்து வெகுநாட்களுக்கு, நாள் தவறாமல் உட்கொள்ள கொடுக்கப்பட வேண்டும். ஆனால், மிக வேகமாக பலனை எதிர்பார்க்கும் பலர், பாதியிலேயே சிகிச்சையை கைவிடுகின்றனர். குடும்பத்தினர் கொஞ்சம் அக்கறையோடு செயல்பட்டால், பலரை மனநோயிலிருந்து மீட்டெடுக்க முடியும்.



மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 https://goldenvimal.business.site/?m=true https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.