YouTube

Wikipedia

Search results

Recent

Categories

Ad Banner

Blogroll

About

Search This Blog

JavaScript Free Code
HTML Free Code
JavaScript Free Code
JavaScript Free Code
JavaScript Free Code

Recent Comments

Recent Post

BTemplates.com

About

Text Widget



Labels

About

Type your text here JavaScript Free Code

Blogroll

Pages - Menu

Weekly post

Tuesday, 16 July 2019

அத்தி வரதரின் வரலாறு

                                      Sri...

தமிழகமே அத்தி வரதர் அதிசயத்தைக் கடந்த சில நாள்களாகப் பேசிக்கொண்டிருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் (48 நாள்கள்) மட்டுமே வெளியே தோற்றம் தரும் வரதர் அல்லவா? ஆத்திகர், நாத்திகர் என்று அனைவரையும் கவர்ந்திருக்கிறார் வரதர். அத்தி வரதரைக் காண மக்கள் அலைமோதுகிறார்கள். அத்திவரதரைச் சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். 

அத்தி வரதரின் வரலாறு என்ன?

இந்தக் கோயிலில் பல சிறப்புகள் இருந்தாலும் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சி தரும் இந்த அத்தி வரதரின் வரலாறு என்ன என்பதை நாம் தேடிப் பார்ப்போம்.
பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில்களில் குடமுழுக்கு நடைபெறும். இந்தக் குடமுழுக்குக்கு முன்னால் கருவறை உள்பட கோயிலின் பகுதிகளில் மராமத்தும் புனரமைப்புப் பணிகளும் நடைபெறும். அந்தக் காலகட்டத்தில் கருவறையில் உள்ள திரு உருவங்களின் சக்தி கும்பத்துக்கு மாற்றப்படுகிறது. கோயில் வளாகத்தில் இதற்கென பாலாலயம் என்னும் இளம் கோயில் ஒன்று உருவாக்கப்படும். இந்த பாலாலயத்தில் அத்தி மரத்தாலான திரு உருவங்கள் அமைக்கப்பட்டு இந்தக் கும்பத்தில் உள்ள சக்தி அவற்றுக்கு மாற்றப்படும். குடமுழுக்கு வரை இவ்வுருவங்களே வழிபாட்டில் இருக்கும். குடமுழுக்கின்போது இவற்றின் சக்தி கோயில் மூலவருக்கு மாற்றப்பட்டு, பாலாலய உருவங்கள் கோயிலில் இருந்து அகற்றப்படும். இவ்வாறு அகற்றப்படும் உருவங்கள் குளங்களிலோ நீர்நிலைகளிலோ விடப்படுகின்றன.

இதற்கு உதாரணமாக 1958ஆம் ஆண்டு திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயிலில் குடமுழுக்குக்கு முன் செய்யப்பட்ட புனரமைப்புப் பணிகளைச் சொல்லலாம். அப்போது அத்தி மரத்தால் ஆன வெங்கடேசப் பெருமாளின் திரு உருவம் செய்யப்பட்டு பாலாலயம் அமைக்கப்பட்டது. இந்த பாலாலயம் 25-10-1957 முதல் 01-11-1957 வரை வழிபாட்டில் இருந்துள்ளது.

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் புனரமைப்புப் பணிகள் நடந்ததாகக் கூறும் முதல் வரலாற்றுக் குறிப்பு 1487ஆம் ஆண்டு என்கிறது. விஜயநகரப் படைத் தளபதியான விருப்பாட்சி தண்டநாயகன் என்பவர் வரதரையும் தாயாரையும் மீண்டும் எழுந்தருளச் செய்ததாகக் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. இதற்குப் பிறகும் காஞ்சி மீது தொடர்ந்து படையெடுப்பு அச்சுறுத்தல்கள் நீடித்தன. 1690ஆம் ஆண்டு அவுரங்கசீப் முகலாயப் பேரரசராக இருந்த காலத்தில் காஞ்சியின் ஃபவுஜ்தார் (படைத் தலைவன்) மற்றும் திவானாக நியமிக்கப்பட்டிருந்தவர் அலி மர்தன் கான். முகலாயப் படைகளை அப்போது காஞ்சியை அடுத்த செஞ்சிப் பகுதியில் நிர்வகித்துவந்தவர் சுல்ஃபிகர் கான். 1692ஆம் ஆண்டு முகலாயரிடமிருந்து மராட்டியர் காஞ்சியைக் கைப்பற்றினர். 1688ஆம் ஆண்டே முகலாயர் படையெடுப்பு வரக்கூடும் என்று உணர்ந்து கொண்ட காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் ஜீயர்கள், வரதரைக் காக்கும் பொருட்டு வழிபாட்டு உருவத்தை இன்றைய திருச்சி மாவட்டத்தில் இருக்கும் உடையார்பாளையத்துக்கு இடம் மாற்றியதாக வரலாற்றுத் தரவுகள் சொல்கின்றன.

ஆபத்து நீங்கிய பின், 1710ஆம் ஆண்டு பரமஹம்ச பரிவாஜகசார்ய அட்டாங் ஜீயர் முயற்சியில் மீண்டும் காஞ்சி வந்து சேர்ந்தார் மூலவரான வரதராஜர். அவரைக் கொண்டுவந்து காஞ்சி சேர்த்தது ஆற்காடு நவாபின் படையில் முக்கியப் பொறுப்பில் இருந்த இஸ்லாமியரான ராஜா தோடர்மால்! இந்த ராஜா தோடர்மால் குடும்பத்துக்கு காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் மட்டுமல்லாமல் திருமலை திருப்பதியிலும் சிற்பங்கள் உண்டு! 1710ஆம் ஆண்டு வரதராஜர் காஞ்சி திரும்பியதற்குச் சற்று முன்னதாகவோ அல்லது பின்பாகவோ புனரமைப்புப் பணிகளும் குடமுழுக்கும் நடைபெற்றிருக்கக்கூடும்.

கோயில்களில் ‘போர்க்கால’ நடவடிக்கைகள்!

இந்தக் காலகட்டத்தில் இஸ்லாமியர் படையெடுப்புக்கு அஞ்சி கோயில் திரு உருவங்கள் மற்றும் புழங்கு பொருள்கள் காக்கப்பட வேண்டி, பல்வேறு வகைகளில் மறைக்கப்பட்டன.

1. மதமாற்றம் செய்ய ஏதுவாக, பிடிக்கப்பட்ட நகரங்களின் வழிபாட்டுத் தலங்களைச் சூறையாடி அழிப்பது என்பதை ஒரு போர்த் தந்திரமாகக் கொண்டிருந்தனர் பண்டைய மன்னர்கள்.

2. ஆனால், மதம் என்பதையும் தாண்டி இந்த மன்னர்கள் கோயில்களில் பெரும் செல்வம் இருந்ததை எப்போதும் அறிந்தே வைத்திருந்தவர்கள் என்பதால், நகரைக் கைப்பற்றியதும் அதன் கோயில்களைச் சூறையாடத் தயங்கியதே இல்லை. அரங்கனே தில்லிக்கு பயந்து ஆண்டுக்கணக்கில் ஒளிக்கப்பட்டு வந்தவர்தான்!

3. கோயில்களில் உள்ள செப்புத் திருமேனிகளின் உலோகம், ஆயுதத் தளவாடங்கள் செய்யப் பயன்பட்டிருக்கிறது. கோயில் ஒன்றைக் கைப்பற்றியதும் அதன் செப்புத் திருமேனிகள் மற்றும் பூசை பொருள்களை உருக்கி தளவாடங்கள் செய்வதன் மூலம் போர் நெருக்கடி காலத்தில் சுரங்கங்களில் வெட்டி எடுத்து, உலோகத்தைப் பிரித்து ஆயுதங்கள் செய்ய ஆகும் நேர, பொருள் விரயத்தைத் தவிர்த்திருக்கிறார்கள்.


ஆகவேதான் இஸ்லாமிய / ஐரோப்பியப் படைகள் நெருங்குவது அறிந்ததும் கோயில்களில் செப்புத் திருமேனிகளை செப்பு பூசைப் பொருள்களுடன் மண்ணுக்கு அடியில் புதைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. ஆபத்து நீங்கியதும் அவற்றை வெளிக்கொணர்ந்துள்ளார்கள். அவ்வப்போது மண்ணுக்கடியில், நிலவறைகளில், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் அண்மையில் இருந்து நமக்குக் கிடைக்கும் இந்த பொருள்கள் அப்படி ஒளிக்கப்பட்டவையே! கல்லாலான திரு உருவங்களின் மேல் சுதை பூசி மறைக்கும் தந்திரமும், வழிபாட்டு உருவத்தை மறைத்துச் சுவர் எழுப்பி வேறோர் சிலையைக் கண்துடைப்புக்காக நிறுவும் தந்திரமும் இஸ்லாமிய / ஐரோப்பிய படையெடுப்புகளின்போது தொடர்ச்சியாகச் செய்யப்பட்டுள்ளதற்கு வரலாற்றுத் தரவுகள் உள்ளன.
மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,